1. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
மனை - இல்லம்
மனைத்தக்க மாண்புடையள் ஆகி - இல்லத்துக்கு ஏற்றவாறு வாழ்க்கை
நடத்தக் கூடியவள்
தற் கொண்டான் - தன்வசம் கொண்டவன் - துணையாகக் கொண்டவன்
வளத்தக்காள் - பொருத்தமானவள்
இல்லத்துக்கு ஏற்றவாறு வாழ்க்கை நடத்தக் கூடியவளே, தன்னை மனைவியாகக் கொண்டவனுக்கு சிறந்த வாழ்க்கைத் துணையாக அமையக்கூடியவள்.
2. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
மனைமாட்சி - இல்லறத்திற்குத் தக்க
இல்லாள் - மனைவி
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - இல்லறத்திற்குத் தக்க மனைவி
இல்லையென்றால்
எனைமாட்சி - எத்தனை சிறப்பு
எனைமாட்சித் தாயினும் = எனைமாட்சி + ·ஆயினும்
= எத்தனை சிறப்பு இருந்தாலும்
இல் - இல்லை
இல்லறத்திற்குத் தக்க நற்குணமுடைய மனைவி ஒருவனுக்கு இல்லையென்றால் எத்தனை சிறப்புக்கள் பொருந்திய வாழ்க்கை அமைந்திருந்தாலும் அது சிறந்த வாழ்க்கை ஆகாது.
3. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.
இதற்கு இரு விதமான பொருள் கொடுக்கலாம்.
ஒன்று
இல்லதென் - இல்லாதது என்ன
இல்லவள் - மனைவி
(மாண்பு - நற்பண்பு)
மாண்பானால் - நற்பண்பு உடையவள் ஆனால்
உள்ளதென் - உள்ளது என்ன
இல்லவள் மாணாக் கடை? - மனைவி நற்பண்பு இல்லாதவளாகிவிட்டால்
ஒருவனுக்கு வாய்த்த மனைவி நற்பண்புகளிற் சிறந்தவளாயிருந்தால் அவனுக்கு இல்லாதது என்ன? (அதாவது ஒரு குறையும் இல்லை).
அதுவே அவனுக்கு வாய்த்த மனைவி நற்பண்புகள் இல்லாதவளாயின், அவனிடம் என்ன உள்ளது. (அதாவது என்ன இருந்தும் ஒரு பயனும் இல்லை)
இரண்டாவது பொருள்:
இல்லதென் - இல்லை என்பது
இல்லவள் - மனைவி
(மாண்பு - பண்பு)
மாண்பானால் - பண்பாக இருந்தால்
உள்ளதென் - உள்ளது என்பது
இல்லவள் மாணாக் கடை? - மனைவி பண்பாக இருக்காது
இல்லை என்று கூறுவதே ஒரு மனைவியின் குணமாக இருந்தால், இருக்கின்றது என்று கூறும் பண்பு (குணம்) ஒருபோதும் வராது.
4. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
மனத்துக்கண் - மனத்தின் கண் - மனதளவில்
மாசிலன் - மாசு + இலன் = மாசு இல்லாதவன்
ஆதல் - ஆகுதல்
அனைத்தறன் - அனைத்து+அறன் - எல்லாத் தருமங்களும்
5. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
அழுக்காறு - பொறாமை
அவா - அளவுக்கு மீறிய ஆசை
வெகுளி - சினம் - அளவுக்கு மீறிய கோபம்
இன்னாச்சொல் - கடும் சொல் - தீய மொழி
இழுக்கா - ஒழுகாது - பின்பற்றாது
அறம் - தருமம்
பொறாமை, அளவுக்கு மீறிய ஆசை, சினம் மற்றும் கடும் சொல் ஆகியவற்றை ஒழித்து (பின்பற்றாது) வாழ்வதே சிறந்த தருமம் ஆகும்.
6. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
7. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
8.வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
9. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
10. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

ஆகுல நீர பிற - அதுவல்லாமல் செய்யப்படுவன எல்லாம் ஆரவாரம் எனும் தன்மையுடையனவாகும்.
மனதளவில் ஒருவன் குற்றமற்றவனாயிருத்தலே சிறந்த தருமமாகும். மனத்தூய்மை இல்லாமல் செய்யப்படும் மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரங்களே.