1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
8. அற ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பகவன் முதற்றே உலகு.
எழுத்துக்கள் எல்லாவற்றுக்கும் "அ" (அகரம்) முதலெழுத்து போல இந்த உலகுக்கு இறைவனே முதன்மையானவன்.
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
இறைவனுடைய திருவடிகளை வணங்காமல் இருப்பாராயின் அவர் கற்ற கல்வியினால் உண்டான பயன் என்ன (ஒன்றுமில்லை).
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலர்களிலே வீற்றிருக்கின்ற அந்த இறைவனுடைய திருப்பாதங்களை அடைந்தவர்கள் (அதாவது முத்தி அடைந்தவர்கள்) தேவலோகத்தில் எப்போதும் வாழ்வார்கள்.
4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விருப்பு வெறுப்பு இரண்டும் இல்லாத அந்த இறைவனுடைய திருப்பாதங்களை அடைந்தவர்களுக்கு எப்போதும் துன்பம் என்பதே இல்லை.
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
இறைவனுடைய கருத்தாழம் மிக்க புகழை விரும்பி நினைப்பவர்களை - குழப்பத்தை உருவாக்கும் நல்வினை மற்றும் தீவினை ஆகிய இரு வினைகளும் அணுக மாட்டாது.
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
(கண் காது மூக்கு நாக்கு தோல் என்கின்ற) ஐம்புல ஆசைகளையும் அடக்கிய இறைவனுடைய பொய் இல்லாத சிறந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள் நீண்ட காலம் நலமுடன் வாழ்வார்கள்.
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
எவரையும் தன்னுடன் ஒப்பிடமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ள அந்த இறைவனது திருவடிகளை நினைப்பவர்களுக்கு மட்டுமே மனக் கவலைகளைப் போக்க முடியும். மற்றவர்க்கு (அவ்வாறு இறைவனது திருவடிகளை நினையாதவர்களுக்கு) மனக்கவலையைப் போக்க முடியாது.
8. அற ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அறக்கடலாக (தருமப் பிரபுவாக) விளங்கும் அந்த இறைவனது திருவடிகளை அடைந்தவர்களுக்கு மறுபிறப்பு என்கின்ற பெரும் கடலை நீந்துவது சுகமானது. அதாவது இறைவனது திருவடிகளை அடைந்தவர்களுக்கு மறுபிறப்பு என்பது இல்லை. அவ்வாறு இறைவனது திருவடிகளை அடையாதவர்களுக்கு மறுபிறப்பு என்கின்ற பெரும் கடலை
நீந்துவது கடினமானது. அதாவது இறைவனது திருவடிகளை அடையாதவர்கள் மறுபடியும் மறுபடியும் பிறந்து கொண்டே இருப்பர்.
நீந்துவது கடினமானது. அதாவது இறைவனது திருவடிகளை அடையாதவர்கள் மறுபடியும் மறுபடியும் பிறந்து கொண்டே இருப்பர்.
9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
எட்டு குணங்களையும் உடைய அந்த இறைவனது திருவடிகளை வணங்காத தலைகள், கேட்காத செவி (பார்வையில்லாத கண்) முதலியன போன்று பயனற்றவையாகும்.
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
இறைவனது திருவடிகளை அடைந்தவர்கள் பிறவி என்கின்ற பெரும் கடலைக் கடப்பர். அதாவது இறைவனது திருவடிகளை அடைந்தவர்களுக்கு மறுபிறப்பு என்பது இல்லை. இறைவனது திருவடிகளை அடையாதவர்கள் பிறவி என்கின்ற பெரும் கடலை கடக்க மாட்டார்கள். அதாவது இறைவனது திருவடிகளை அடையாதவர்களுக்கு மறுபிறப்பு என்பது மீண்டும் மீண்டும் வரும்.
No comments:
Post a Comment