1. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
இல்வாழ்வான் - இல்லறத்தைச் சரியாகக் கடைப்பிடித்து வாழ்பவன்
இயல்புடைய மூவர் - நல்ல இயல்புகளையுடைய மூவர்
"மூவர்" - என்பதற்கு பலர் பலவித விளக்கங்கள் கூறியுள்ளனர்
மூவர் - மனைவி, மக்கள், பெற்றோர்
மூவர் - ஆசிரியர், பிரம்மச்சாரிகள், துறவிகள்
மூவர் - பிள்ளைகள், பெற்றோர், உறவினர்
நல்லாற்றின் - நல்ல வழியில்
சிறந்த இல்வாழ்க்கை நடத்துபவன் என்பவன், அறத்தின் இயல்பையுடைய மூவர்க்கும் நல்வழியில் துணைநிற்பவனே ஆவான்.
மூன்று அறநிலைகள் - கல்வி, மனைத்துறவு, துறவு
அதனால் அறத்தின் இயல்புடைய மூவர் என்போர்
கல்வி => ஆசிரியர்
மனைத்துறவு =>பிரம்மச்சாரிகள்
துறவு =>துறவிகள்
2. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான்
என்பான் துணை.
துறந்தார் - பற்றினைத் துறந்தவர் - துறவிகள்
துவ்வாதவர் - சாப்பிடாதவர் - வறியோர்
இறந்தார் - உதவி கேட்போர் - உதவியில்லாதவர்
துறவிகள், வறியோர் மற்றும் உதவியில்லாதவர்க்கு சிறப்பாக இல்லறம் நடத்துபவன் துணை நிற்பான்
3. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
தென்புலத்தார் - தெற்குத் திசையில் இருப்பவர் - இறந்தவர்கள்
தெய்வம் - கடவுள் (தேவர்கள்)
விருந்து - விருந்தினர்
ஒக்கல் - சுற்றத்தார்
தான் - தான்
இறந்தவர்கள், கடவுள், விருந்தினர், சுற்றத்தார் மற்றும் தான் என்கின்ற இந்த ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தை தவறாமல் செய்வது இல்வாழ்க்கை நடத்துபவனின் தலையாய கடமை ஆகும்.
பழியஞ்சி - பழிக்கு (பாவத்துக்கு) அஞ்சி
பாத்தூண் - பகுத்து உண்ணும் பண்பு
வழியெஞ்சல் - வழி + எஞ்சல் = பரம்பரை + அழிதல்
எஞ்ஞான்றும் இல் - எப்போதும் இல்லை
பாவத்துக்கு பயந்து, ஈட்டிய பொருளை, எல்லோருக்கும் பகிர்ந்து உண்ணும் பண்பைக் கொண்டவனது வாழ்க்கையில், அவனது பரம்பரை அழிவது என்பது எப்போதும் இல்லை.
5. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பாசமும் தரும காரியங்களும் நிறைந்த ஒருவனது இல்வாழ்க்கையே சிறந்த பண்பானதும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
அறத்தாற்றின்= அறத்து + ஆற்றின் =அறத்தின் வழியில்
புறத்தாற்றில் - வேறு வழியில்
ஒருவன் அறத்தின் வழியில் இல்லற வாழ்க்கையை நடாத்தி வந்தால், அவனால் வேறு வழியில் சென்று பெறக்கூடியது தான் என்ன?
7. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
இயல்பினான் - இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்தவன்
முயல்வாருள் - முயற்சிகளை மேற்கொள்வோரில்
ஆற்றின் ஒழுக்கி - அற நெறியில் பிறரை நடக்கச்செய்து
அறனிழுக்கா - அறம் தவறாத
நோற்பார் - நோன்பு நோற்பார் - தவஞ்செய்பவர்
மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும் அறம் தவறாது வாழும் இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
9. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
அறம் என்று சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மிகவும் நன்மையாகும்.
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்
நல்லாற்றின் நின்ற துணை.
இல்வாழ்வான் - இல்லறத்தைச் சரியாகக் கடைப்பிடித்து வாழ்பவன்
இயல்புடைய மூவர் - நல்ல இயல்புகளையுடைய மூவர்
"மூவர்" - என்பதற்கு பலர் பலவித விளக்கங்கள் கூறியுள்ளனர்
மூவர் - மனைவி, மக்கள், பெற்றோர்
மூவர் - ஆசிரியர், பிரம்மச்சாரிகள், துறவிகள்
மூவர் - பிள்ளைகள், பெற்றோர், உறவினர்
நல்லாற்றின் - நல்ல வழியில்
சிறந்த இல்வாழ்க்கை நடத்துபவன் என்பவன், அறத்தின் இயல்பையுடைய மூவர்க்கும் நல்வழியில் துணைநிற்பவனே ஆவான்.
மூன்று அறநிலைகள் - கல்வி, மனைத்துறவு, துறவு
அதனால் அறத்தின் இயல்புடைய மூவர் என்போர்
கல்வி => ஆசிரியர்
மனைத்துறவு =>பிரம்மச்சாரிகள்
துறவு =>துறவிகள்
2. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான்
என்பான் துணை.
துறந்தார் - பற்றினைத் துறந்தவர் - துறவிகள்
துவ்வாதவர் - சாப்பிடாதவர் - வறியோர்
இறந்தார் - உதவி கேட்போர் - உதவியில்லாதவர்
துறவிகள், வறியோர் மற்றும் உதவியில்லாதவர்க்கு சிறப்பாக இல்லறம் நடத்துபவன் துணை நிற்பான்
3. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
தென்புலத்தார் - தெற்குத் திசையில் இருப்பவர் - இறந்தவர்கள்
தெய்வம் - கடவுள் (தேவர்கள்)
விருந்து - விருந்தினர்
ஒக்கல் - சுற்றத்தார்
தான் - தான்
இறந்தவர்கள், கடவுள், விருந்தினர், சுற்றத்தார் மற்றும் தான் என்கின்ற இந்த ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தை தவறாமல் செய்வது இல்வாழ்க்கை நடத்துபவனின் தலையாய கடமை ஆகும்.
4. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.பழியஞ்சி - பழிக்கு (பாவத்துக்கு) அஞ்சி
பாத்தூண் - பகுத்து உண்ணும் பண்பு
வழியெஞ்சல் - வழி + எஞ்சல் = பரம்பரை + அழிதல்
எஞ்ஞான்றும் இல் - எப்போதும் இல்லை
பாவத்துக்கு பயந்து, ஈட்டிய பொருளை, எல்லோருக்கும் பகிர்ந்து உண்ணும் பண்பைக் கொண்டவனது வாழ்க்கையில், அவனது பரம்பரை அழிவது என்பது எப்போதும் இல்லை.
5. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பாசமும் தரும காரியங்களும் நிறைந்த ஒருவனது இல்வாழ்க்கையே சிறந்த பண்பானதும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
6. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ எவன்.அறத்தாற்றின்= அறத்து + ஆற்றின் =அறத்தின் வழியில்
புறத்தாற்றில் - வேறு வழியில்
ஒருவன் அறத்தின் வழியில் இல்லற வாழ்க்கையை நடாத்தி வந்தால், அவனால் வேறு வழியில் சென்று பெறக்கூடியது தான் என்ன?
7. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
இயல்பினான் - இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்தவன்
முயல்வாருள் - முயற்சிகளை மேற்கொள்வோரில்
நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.
8. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.8. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
ஆற்றின் ஒழுக்கி - அற நெறியில் பிறரை நடக்கச்செய்து
அறனிழுக்கா - அறம் தவறாத
நோற்பார் - நோன்பு நோற்பார் - தவஞ்செய்பவர்
மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும் அறம் தவறாது வாழும் இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.
9. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
அறம் என்று சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மிகவும் நன்மையாகும்.
10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்
இல்வாழ்க்கை முற்றும்
No comments:
Post a Comment