Wednesday, 18 July 2012

அதிகாரம் 6 - வாழ்க்கைத் துணைநலம்

1. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
   வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

மனை - இல்லம்
மனைத்தக்க மாண்புடையள் ஆகி - இல்லத்துக்கு ஏற்றவாறு வாழ்க்கை   
                                                   நடத்தக் கூடியவள் 
தற் கொண்டான் - தன்வசம் கொண்டவன் - துணையாகக் கொண்டவன்
வளத்தக்காள் - பொருத்தமானவள்

இல்லத்துக்கு ஏற்றவாறு வாழ்க்கை நடத்தக் கூடியவளே, தன்னை மனைவியாகக் கொண்டவனுக்கு சிறந்த வாழ்க்கைத் துணையாக அமையக்கூடியவள். 

2. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
   எனைமாட்சித் தாயினும் இல்.

மனைமாட்சி - இல்லறத்திற்குத் தக்க
இல்லாள் - மனைவி
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - இல்லறத்திற்குத் தக்க மனைவி 
                                                            இல்லையென்றால் 
எனைமாட்சி - எத்தனை சிறப்பு 
எனைமாட்சித் தாயினும் = 
எனைமாட்சி + ·ஆயினும்
                                   =  எத்தனை சிறப்பு இருந்தாலும்
இல் - இல்லை 

இல்லறத்திற்குத் தக்க நற்குணமுடைய மனைவி ஒருவனுக்கு இல்லையென்றால் எத்தனை சிறப்புக்கள் பொருந்திய வாழ்க்கை அமைந்திருந்தாலும் அது சிறந்த வாழ்க்கை ஆகாது.

3. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
  இல்லவள் மாணாக் கடை?.

இதற்கு இரு விதமான பொருள் கொடுக்கலாம்.


 ஒன்று

இல்லதென் - இல்லாதது என்ன
இல்லவள் - மனைவி
(மாண்பு - நற்பண்பு)
மாண்பானால் -  நற்பண்பு உடையவள் ஆனால்

உள்ளதென் - உள்ளது என்ன
இல்லவள் மாணாக் கடை? - மனைவி நற்பண்பு இல்லாதவளாகிவிட்டால்

ஒருவனுக்கு வாய்த்த மனைவி நற்பண்புகளிற் சிறந்தவளாயிருந்தால் அவனுக்கு இல்லாதது என்ன? (அதாவது ஒரு குறையும் இல்லை).

அதுவே அவனுக்கு வாய்த்த மனைவி 
நற்பண்புகள் இல்லாதவளாயின், அவனிடம் என்ன உள்ளது. (அதாவது என்ன இருந்தும் ஒரு பயனும் இல்லை)

இரண்டாவது பொருள்:

இல்லதென்இல்லை என்பது
இல்லவள்மனைவி
(மாண்பு - பண்பு)
மாண்பானால் பண்பாக இருந்தால்

உள்ளதென்உள்ளது என்பது
இல்லவள் மாணாக் கடை? - மனைவி பண்பாக இருக்காது

இல்லை என்று கூறுவதே ஒரு மனைவியின் குணமாக இருந்தால், இருக்கின்றது என்று கூறும் பண்பு (குணம்) ஒருபோதும் வராது.


4. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 
   ஆகுல நீர பிற.

மனத்துக்கண் - மனத்தின் கண் - மனதளவில்
மாசிலன் - மாசு + இலன் = மாசு இல்லாதவன்
ஆதல் - ஆகுதல்
அனைத்தறன் - அனைத்து+அறன் - எல்லாத் தருமங்களும்

ஆகுல நீர பிற - அதுவல்லாமல் செய்யப்படுவன எல்லாம் ஆரவாரம் எனும் தன்மையுடையனவாகும்.

மனதளவில் ஒருவன் குற்றமற்றவனாயிருத்தலே சிறந்த தருமமாகும். மனத்தூய்மை இல்லாமல் செய்யப்படும் மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரங்களே.



5. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
   இழுக்கா இயன்றது அறம்.

  அழுக்காறு - பொறாமை
  அவா - அளவுக்கு மீறிய ஆசை
  வெகுளி - சினம் - அளவுக்கு மீறிய கோபம்  
  இன்னாச்சொல்  - கடும் சொல் - தீய மொழி

  இழுக்கா - ஒழுகாது - பின்பற்றாது
  அறம் - தருமம்

பொறாமை, அளவுக்கு மீறிய ஆசை, சினம் மற்றும் கடும் சொல் ஆகியவற்றை ஒழித்து (பின்பற்றாது) வாழ்வதே சிறந்த தருமம் ஆகும். 

6. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது 
   பொன்றுங்கால் பொன்றாத் துணை.

7. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
   பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

8.வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 
  வாழ்நாள் வழியடைக்கும் கல்.

9. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் 
   புறத்த புகழும் இல.

10. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
    உயற்பால தோரும் பழி. 




Friday, 18 May 2012

அதிகாரம் 5: இல்வாழ்க்கை

1. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
   நல்லாற்றின் நின்ற துணை.



இல்வாழ்வான் - இல்லறத்தைச் சரியாகக் கடைப்பிடித்து வாழ்பவன்
இயல்புடைய மூவர் - நல்ல இயல்புகளையுடைய மூவர்


"மூவர்" - என்பதற்கு பலர் பலவித விளக்கங்கள் கூறியுள்ளனர்


மூவர் - மனைவி, மக்கள், பெற்றோர்
மூவர் - ஆசிரியர், பிரம்மச்சாரிகள், துறவிகள்
மூவர் - பிள்ளைகள், பெற்றோர், உறவினர்


நல்லாற்றின் - நல்ல வழியில் 


சிறந்த இல்வாழ்க்கை நடத்துபவன் என்பவன், அறத்தின் இயல்பையுடைய மூவர்க்கும் நல்வழியில் துணைநிற்பவனே ஆவான்.


மூன்று அறநிலைகள் - கல்வி, மனைத்துறவு, துறவு
அதனால் அறத்தின் இயல்புடைய மூவர் என்போர்
கல்வி => ஆசிரியர்
மனைத்துறவு =>பிரம்மச்சாரிகள்
துறவு =>துறவிகள்


2. துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் 
    என்பான் துணை.


துறந்தார் - பற்றினைத் துறந்தவர் - துறவிகள்
துவ்வாதவர் - சாப்பிடாதவர் - வறியோர்
இறந்தார் - உதவி கேட்போர் - உதவியில்லாதவர்


துறவிகள், வறியோர் மற்றும் உதவியில்லாதவர்க்கு சிறப்பாக இல்லறம் நடத்துபவன் துணை நிற்பான்


3. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
    ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.


தென்புலத்தார் - தெற்குத் திசையில் இருப்பவர் - இறந்தவர்கள்
தெய்வம் - கடவுள் (தேவர்கள்)
விருந்து - விருந்தினர்
ஒக்கல் - சுற்றத்தார்
தான் - தான்


இறந்தவர்கள், கடவுள், விருந்தினர், சுற்றத்தார் மற்றும் தான் என்கின்ற இந்த ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தை தவறாமல் செய்வது இல்வாழ்க்கை நடத்துபவனின் தலையாய கடமை ஆகும்.

4. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை 
   வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.


பழியஞ்சி - பழிக்கு (பாவத்துக்கு) அஞ்சி
பாத்தூண் - பகுத்து உண்ணும் பண்பு
வழியெஞ்சல் - வழி + எஞ்சல் = பரம்பரை + அழிதல்
எஞ்ஞான்றும் இல் - எப்போதும் இல்லை


பாவத்துக்கு பயந்து, ஈட்டிய பொருளை, எல்லோருக்கும் பகிர்ந்து உண்ணும் பண்பைக் கொண்டவனது வாழ்க்கையில், அவனது பரம்பரை அழிவது என்பது எப்போதும் இல்லை.


5. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 
   பண்பும் பயனும் அது.


பாசமும் தரும காரியங்களும் நிறைந்த ஒருவனது இல்வாழ்க்கையே சிறந்த பண்பானதும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

6. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் 
    போஒய்ப் பெறுவ எவன்.


அறத்தாற்றின்= அறத்து + ஆற்றின் =அறத்தின் வழியில் 
புறத்தாற்றில் - வேறு வழியில்


ஒருவன் அறத்தின் வழியில் இல்லற வாழ்க்கையை நடாத்தி வந்தால், அவனால் வேறு வழியில் சென்று பெறக்கூடியது தான் என்ன?  

7. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் 
    முயல்வாருள் எல்லாம் தலை.


இயல்பினான் - இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்தவன்
முயல்வாருள்  - முயற்சிகளை மேற்கொள்வோரில்


நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்.


8. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 
    நோற்பாரின் நோன்மை உடைத்து.


ஆற்றின் ஒழுக்கி - அற நெறியில் பிறரை நடக்கச்செய்து
அறனிழுக்கா  - அறம் தவறாத
நோற்பார் - நோன்பு நோற்பார் - தவஞ்செய்பவர்


மற்றவரை அறநெறியில் ஒழுகச்செய்து தானும் அறம் தவறாது வாழும் இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிகச்சிறந்த வல்லமை உடைய வாழ்க்கையாகும்.


9. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் 
   பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

அறம் என்று சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மிகவும் நன்மையாகும்.

10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் 
     தெய்வத்துள் வைக்கப் படும்.


உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்


இல்வாழ்க்கை முற்றும்

Monday, 5 March 2012

அதிகாரம் 4: அறன்வலியுறுத்தல்


1. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு 
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

சிறப்புஈனும் - பெருமை தரும்
செல்வமும் ஈனும் - செல்வத்தையும் (பொருளையும்) தரும்
அறத்தினூஉங்கு - தருமத்தின் பயனாக
வீடு பேறாகிய சிறப்பையும் செல்வச்செழிப்பையும் அறவழியானது எமக்குத் தருவதால், அந்த அறவழியை விட மேன்மையானது ஏதாவது உண்டா?

2. அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை 
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

அறத்தினூஉங்கு -  தருமத்தின் பயனாக

ஒருவருக்கு தருமத்தை விட நன்மை தரக்கூடியது எதுவுமில்லை அதேபோல் அதனைச் செய்ய மறப்பதைப் போல கெடுதியானதும் ஒன்றுமில்லை.

3. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

 ஒல்லும் வகையான் - தத்தமக்கு இயலுமான வரையில்
ஓவாதே - ஒழியாதே - நிறுத்தாதே.
செல்லும்வாய் எல்லாம் - செல்லும் இடமெல்லாம்

செல்லும் இடமெல்லாம், தமக்குத் தமக்கு இயலுமான வரையில் அறச்செயல்களைத் தொடர்ந்து செய்யவேண்டும்.

4. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 
ஆகுல நீர பிற.

மனத்துக்கண் மனத்தின்கண் - தனது மனத்துக்கு
மாசிலன் - மாசு + இலன் - குற்றம் இல்லாதவன்
அனைத்தறன் - அனைத்து + அறன் - அதுவே தருமம்

பிற - மற்றவை

ஆகுல நீர  - அறம் ஆகாது

தனது மனத்துக்கு குற்றம் இல்லாதவனாக இருப்பதே தருமமாகும். மற்றவை எல்லாம் அறம் ஆகாது.

5. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்றது அறம்.

அழுக்காறு  - பொறாமை
அவா -  ஆசை
வெகுளி - சினம்
இன்னாச்சொல் - கடுஞ்சொல்

 பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் தவிர்த்து ஒழுகுவதே அறமாகும்.
  
6. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
    பொன்றுங்கால் பொன்றாத் துணை.

அன்றறிவாம் - அன்று + அறிவாம் = பிறகு பார்த்துக்கொள்ளலாம்
என்னாது - என்று கூறாது
பொன்றுங்கால் - இறக்கும்போது
பொன்றா - அழியாத

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும். 

7. அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
   பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

 அறத்தாறு = அறத்து + ஆறு = அறத்தின பயன்
 இதுவென = இது என 
சிவிகை = பல்லக்கு
பொறுத்தானோடு = தூக்குபவனோடு 
ஊர்ந்தான் = பயணிப்பவன்

அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.

அதாவது

அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போலவும்
தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போலவும்-இருப்பர். இவர்கள் இருவரையும் ஒப்பிடுவதன் மூலம் - தருமத்தின் பயன் யாது என்று அறிந்து கொள்ளலாம்.

8. வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
    வாழ்நாள் வழியடைக்கும் கல்.

வீழ்நாள் = பயனற்ற நாள்
படாஅமை = கழிந்து போகாமல்
நன்றாற்றின் - நன்று + ஆற்றின் - நல்லது செய்யின்
வாழ்நாள் வழியடைக்கும் கல் - வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

ஒருநாள் கூட பயனற்றதாக கழிந்து போகாமல் நல்லது செய்தால்அச்செயலே, அவன் திரும்பப் பிறக்கும் வழியை அடைக்கும் கல் ஆகும். அதாவது அவனுக்கு வீடுபேறு (முத்தி) கிடைக்கும்.

9. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
     புறத்த புகழும் இல.

அறத்தான் - அறத்தால் 

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.



10. செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
      உயற்பால தோரும் பழி.

செயற்பாலது - செய்யகூடியது
உயற்பால - ஒழிக்ககூடியது - தவிர்க்கக்கூடியது

ஒருவன் செய்யத் தக்கது அறமே; செய்யாமல் (தவிர்க்கத்)விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.


அறன்வலியுறுத்தல் முற்றும்