1. வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
வான்நின்று - வானத்திலிருந்து (வரும் மழையைக் குறிக்கும்)
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( பயிர் விழைவிக்கும்) கமக்காரர் ஏர் மூலம் உழ மாட்டார்கள்.
5. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கெடுப்பதூஉம் - கெடுப்பதுவும் (பெய்யாமல் மக்களைக் கெடுப்பதுவும்)
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதுவும் மழையே; அதேபோல் (ஒழுங்காக பெய்து) கெட்டவர்களுக்குத் துணையாக அமைந்து அவர்களை வாழ வைப்பதுவும் மழையே.
வானம் பொய்த்துவிட்டால் (மழை பெய்யாவிட்டால்) தேவர்களுக்கும் கூட சிறப்பாக பூசைகள் நடக்காது.
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
வான்நின்று - வானத்திலிருந்து (வரும் மழையைக் குறிக்கும்)
உரிய காலத்தில் மழை பெய்வதால்தான் உலகம் சிறப்பாக இயங்கி வருகிறது; அதனால் மழையை அமுதம் என்று கூறலாம்.
2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
துப்பார்க்கு - உண்பவர்க்கு (சாப்பிடுபவர்க்கு) - அதாவது உண்ணும் உயிரினங்களுக்கு
துப்பாய - உண்ணக்கூடிய (சாப்பிடக்கூடிய)
துப்பாக்கி - உணவாக்கி (சாப்பாடாக்கி) - உணவை விளைவைத்து
உண்பவர்க்கு (உயிர்களுக்கு) சாப்பிடுவதற்கு உகந்த உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பதும் மழையாகும்.
3. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
உள்நின்று உடற்றும் பசி.
விண்இன்று - ஆகாயத்தில் இருந்து (வரும் மழை)
பொய்ப்பின் - பொய்க்குமானால் (பெய்யாது விட்டால்)
உடற்றும் - வருத்தும்.
விரிநீர் - பரந்த நீர் (கடல்)
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், (பரந்த - நீர் நிறைந்த) கடலால் சூழப்பட்ட உலகமாயினும், பசி தோன்றி இந்த உலகத்தினுள்ளே நின்று வருத்தும்.
5. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
5. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
ஏரின் - ஏரிலிருந்து
உழாஅர் - உழமாட்டார்
உழவர் - கமக்காரர்
புயல் என்னும் - மழை என்னும்
வாரி - வருவாய்
வளங்குன்றி - வளம் குன்றி
கால் - விட்டால்
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( பயிர் விழைவிக்கும்) கமக்காரர் ஏர் மூலம் உழ மாட்டார்கள்.
5. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கெடுப்பதூஉம் - கெடுப்பதுவும் (பெய்யாமல் மக்களைக் கெடுப்பதுவும்)
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதுவும் மழையே; அதேபோல் (ஒழுங்காக பெய்து) கெட்டவர்களுக்குத் துணையாக அமைந்து அவர்களை வாழ வைப்பதுவும் மழையே.
6. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
பசும்புல் தலைகாண்பு அரிது.
விசும்பு - மேகம்
விசும்பின் - மேகத்திலிருந்து
துளி - மழைத்துளி
வீழின் அல்லால் - விழுந்தாலன்றி (விழாவிட்டால்)
காண்பு அரிது - காண்பது அரிது (காணமுடியாது)
வானத்திலிருந்து மழைத்துளி விழாவிட்டால், உலகத்தில் பசுமையான புல்லின் தலையைக் கூட காண முடியாது.
7. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
காண்பு அரிது - காண்பது அரிது (காணமுடியாது)
வானத்திலிருந்து மழைத்துளி விழாவிட்டால், உலகத்தில் பசுமையான புல்லின் தலையைக் கூட காண முடியாது.
7. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
தடிந்தெழிலி - அள்ளிக் (முகந்து ) கொண்டு செல்வதற்கு
தான்நல்காது ஆகி விடின் - தான் கொடுக்காது விட்டால் (அதாவது கடல் தனது நீரைக் கொடுக்காது விட்டால்)
தன்நீர்மை - வளம்.
மழை பெய்வதற்காக, மேகமானது கடல் நீரை அள்ளிக் (முகந்து ) கொண்டு செல்வதற்கு, கடலானது நீரை வழங்காது விட்டால், அந்த நெடுங்கடலும் கூட வளம் குன்றிப் போகும்.
( மறை பொருள் - கற்றோர் தாம் கற்ற கல்வியை சமுக முன்னேற்றத்துக்கு உபயோகிக்காவிட்டால் அது கற்றவர்களுடைய புகழையும் மங்கவைக்கும்.)
8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
வானோர்க்கும் - தேவர்களுக்கும்
சிறப்பொடு - சிறப்பாக
பூசனை - பூசைகள்
செல்லாது - நடக்காது
வானம் வறக்குமேல் - வானம் பொய்த்துவிட்டால் (மழை பெய்யாவிட்டால்)வானம் பொய்த்துவிட்டால் (மழை பெய்யாவிட்டால்) தேவர்களுக்கும் கூட சிறப்பாக பூசைகள் நடக்காது.
( மறை பொருள் - மழை பெய்யாவிட்டால் உலகில் எதுவுமே சிறப்பாக நடைபெறாது)
9. தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
9. தானம் தவம் இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
தானம் - தருமம்
தங்கா - நிலைக்காது
வியன் உலகம் - விரிந்த இவ்வுலகம்
வானம் வழங்கா தெனின் - மேகம் கொடுக்காவிட்டால் (அதாவது மழை பெய்யாவிட்டால்)
வானம் வழங்கா தெனின் - மேகம் கொடுக்காவிட்டால் (அதாவது மழை பெய்யாவிட்டால்)
மழை பெய்யாவிட்டால், பிறருக்காக வழங்கும் தருமமோ அல்லது தனக்காகச் செய்யும் தவமோ இந்த விரிந்த உலகத்தில் இல்லாது போய்விடும்.
10. நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
நீர் இன்று - நீர் இல்லாமல்
வான்இன்று - மேகம் இல்லாமல்
ஒழுக்கு - மழை
நீர் இல்லாமல் இந்த உலகம் இயங்காது அதேபோல மேகம் வழங்காமல் மழை கிடைக்காது.
வான் சிறப்பு முற்றும்